india

img

ஆதார் அட்டையைக் காட்டக்கோரி முஸ்லிம் தொழிலாளி மீது தாக்குதல்.... ம.பி. மாநிலத்தில் ஒரே வாரத்தில் 2-ஆவது சம்பவம்....

போபால்:
உத்தரப் பிரதேசம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்லீம் அலி (25) என்ற வளையல் வியாபாரி, தன்னைஇந்து என்று கூறி, வாடிக்கையாளர்களி டம் வியாபாரம் செய்தார்; 3 விதமானஅடையாள அட்டைகளை அவர் வைத்திருந்தார் என்று கூறி மதவெறியர்கள் தாக்குதல் நடத்தினர்.

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. மேலும் பாதிக்கப்பட்ட தஸ்லீம் மீதே போக்சோ உட்பட 14 பிரிவுகளில் வழக்கும்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான அதிர்ச்சி மறைவதற்கு முன்பாக, அதே மத்தியப்பிர தேச மாநிலத்தில், மற்றுமொரு முஸ்லிம் வியாபாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.45 வயதான ஜாகித்கான் ஒருகூலித் தொழிலாளி ஆவார். கிராமம் கிராமமாக இருசக்கர வாகனத்தில் சென்று பிஸ்கட் விற்பனை செய்துவரக் கூடியவர். ம.பி. மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள அம்லாதாஸ் கிராமத்தைச் சேர்ந்த இவர், அருகிலுள்ள போர்லி கிராமத்துக்கு வழக்கம் போல் பிஸ்கட் விற்கச் சென்றுவிட்டு, திரும்பி வந்துள்ளார். அப்போது இரண்டு பேர், அவரிடம் வந்து, “நீ யார், அடையாள அட்டையைக் காட்டு, ஆதாரை எடு!” என்றுமிரட்டியுள்ளனர். ஜாகித்திடம் ஆதார் அட்டை அப்போது இல்லை. இதனையடுத்து அந்த இருவரும் ஜாகித்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், ஜாகித்தின் கை, மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

;